வணிகம்
10-ம் வகுப்பு தகுதிக்கு ஊராட்சி செயலாளர் வேலை; 1482 காலியிடம்; நோ எக்ஸாம்; முந்துங்க மக்களே!
10-ம் வகுப்பு தகுதிக்கு ஊராட்சி செயலாளர் வேலை; 1482 காலியிடம்; நோ எக்ஸாம்; முந்துங்க மக்களே!
தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் (Panchayat Secretary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 1,300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் மாவட்டம் வாரியாக நிரப்பப்பட உள்ளன.குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி என உயர் கல்வித் தகுதி கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பின் சிறப்பம்சம் என்னவென்றால், பணி நியமனத்துக்கு எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாது! 10-ம் வகுப்பு மதிப்பெண் மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறவுள்ளதுடி.என்.ஆர்.டி (TNRD) அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அக்டோபர் 10, 2025 முதல் நவம்பர் 9, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது, கல்விச் சான்றிதழ், ஜாதிச் சான்று, முன்னுரிமைச் சான்று ஆகியவற்றின் ஆதாரங்களை (Proof) கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.பொதுப் பிரிவினர் மற்றும் பி.சி. பிரிவினருக்கு ₹100, எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு ₹50 ஆகும்.நேர்காணல் டிசம்பர் 4 முதல் 12 வரை நடத்தப்பட்டு, டிசம்பர் 17, 2025 அன்று பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளோர் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.