பொழுதுபோக்கு
அப்பா, மகனுக்கு ஜோடியாக நடித்தவர்… பஞ்சாயத்தை இழுத்து விட்ட முத்தக்காட்சி; இவர் நடிகை யார் தெரியுமா?
அப்பா, மகனுக்கு ஜோடியாக நடித்தவர்… பஞ்சாயத்தை இழுத்து விட்ட முத்தக்காட்சி; இவர் நடிகை யார் தெரியுமா?
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர் மாதுரி தீட்ஷித். இவர் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். நடன கலைஞரான மாதுரி தீட்ஷித் தனது 17 வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த 1984-ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ’அபோத்’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த மாதுரி தீட்ஷித் தொடர்ந்து, தேசாப் , தில் , பேட்டா, ஹம் ஆப்கே ஹைன் கவுன், தில் தோ பாகல் ஹை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இவர் கடந்த ஆண்டு வெளியான ’பூல் புலாயா 3’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை மாதுரி தீட்ஷித், கடந்த 1988-ஆம் ஆண்டு ‘தயாவன்’ என்கிற படத்தில் நடிகர் வினோத் கண்ணாவிற்கு ஜோடியாக நடித்தார். இப்படம் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘நாயன்’ திரைப்படத்தின் ரீமேக்காகும்.இந்நிலையில், ‘தயாவன்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆஜ் பிர் தும் பே பியார் ஆயா ஹை’ என்ற ஹிட் பாடலில் வினோத்தும், நடிகை மாதுரி தீட்ஷித்தும் நடித்துக் கொண்டிருந்தனர். பாடலில் ஒரு முத்த காட்சியை எடுக்க இயக்குநர் பெரோஸ் கான் திட்டமிட்டிருந்தார். அதன்படி முத்த காட்சி எடுக்கப்பட்டது. இந்த காட்சிக்கு பிறகு மாதுரி அழுது கொண்டே சென்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், இந்த முத்தக் காட்சியை வைத்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது என்பதால் இந்தப் படம் கவனிக்கப்பட்ட படமாக அமைந்தது. இதன் பிறகு, 10 ஆண்டுகள் கழித்து கடந்த 1997-ல் வினோத் கண்ணாவின் மகன் அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக மாதுரி தீட்ஷித் கதாநாயகியாக நடித்தார். இந்த ஜோடி இணைந்து நடித்த ‘மொஹபத்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.