சினிமா

அரவிந்த் சாமி இப்படிப்பட்ட மனுஷனா? ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ 25 லட்சம் வின்னர் காளியம்மா…

Published

on

அரவிந்த் சாமி இப்படிப்பட்ட மனுஷனா? ’நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ 25 லட்சம் வின்னர் காளியம்மா…

தமிழ் சினிமாவில் நடிகர் அரவிந்த் சாமிக்கு என்றே தனித்துவமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அறிமுகமான படம் வரை இன்று வரை ரசிகர்களின் மனதை ஈர்த்து வரும் அரவிந்த் சாமி, மெய்யழகன் படத்தில் மிகப்பெரிய நடிப்பை கொடுத்து அசத்தினார்.இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது போட்டியாளராக கலந்து கொண்ட காளியம்மா என்பவர் அரவிந்த் சாமி பற்றி பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.அதில், நான் முதலில் அந்த நிகழ்ச்சிக்கான ஆடிசனுக்கு போகும்போது எனக்கு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும், பணம் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை, மீனவர்களின் பிரச்சனைகளை பேச ஒரு ஊடகம் தேவைப்பட்டதால் அந்த மனநிலையில் தான் சென்றேன்.ஆனால் அந்நிகழ்ச்சியின் இயக்குநர்தான் என்னை போட்டியில் கலந்து கொள்ளச்சொன்னார். நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது கேள்விகளுக்கு நடுவே, மீனவ சமூக மக்கள்ப்படுகிற கஷ்டங்கள் குறித்து நான் அரவிந்த் சாமி சாருடன் பேசினேன். சில நேரங்களில் ஆஃப் த கேமராவிலும்கூட அவரிடம் பேசியிருக்கிறேன். அவரும் நான் பேசியதை முழுவதுமாக கேட்டுள்ளார்.ஒருமுறை ஒரு ஷாட் முடிந்து இன்னொரு ஷாட்டுக்காக எல்லாரும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். அப்போது என் கணவரிடம் அரவிந்த் சாமி சார் பேசிக்கொண்டிருந்தார்.அதாவது மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லும்போது அவர்கள் என்ன மாதிரியான இன்னல்களை எதிர் கொள்கிறார்கள் என்பது குறித்து மிகவும் அதிர்ச்சியோடு கேட்டுத்தெரிந்து கொண்டார்.அப்போது ஒரு உதவியாளர் ஷாட் ரெடி என்று கூற, உடனே கோபப்பட்ட அரவிந்த் சாமி சார், 10 நிமிடம் லேட்டா ஷாட் எடுத்தா ஒன்னும் குறைந்துப்போகாது. மக்கள் உயிர் போகிற விசயம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.நான் ரூபாய் 25 லட்சம் வென்றப்பின், மேடைக்கு கீழே வந்து, இந்த 25 லட்சத்தில் 8 லட்சம் ரூபாய் வரிகளாக பிடித்துக்கொள்வார்கள். மீதிப்பணத்தை வைத்து எப்படி வீடு கட்டுவீர்கள் என்று கேட்டார். நானோ 8 லட்சம் வரிகள் போய்விடும் என்று சொன்னதும் அதிர்ச்சியாகிவிட்டேன். காரணம் எனக்கு அந்த விவரம் தெரியாததுதான்.அதன்பின் அரவிந்த் சாமி சாரிடம் அவரது உதவியை மறுத்துவிட்டேன். ஆனால், அவர் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அவருக்கு எங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தது என்று காளியம்மாள் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version