இலங்கை

இராணுவத்தின் 76ஆவது ஆண்டு விழா: சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

Published

on

இராணுவத்தின் 76ஆவது ஆண்டு விழா: சிரேஷ்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

இராணுவத்தின் 76 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு  ஒக்டோபர் 10 ஆம் திகதி சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோர் இணைந்து ஐந்து சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு மேஜர் ஜெனரல் பதவியை வழங்கியுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் காயமடைந்த சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கே இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், விமானப் படைத் துணைத் தளபதி (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யக்கோந்த மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோரின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version