இலங்கை

இலங்கையில் இளைஞனை கொலை செய்த சாரதி ; 32 ஆண்டுகளின் பின் கைதான சந்தேக நபர்

Published

on

இலங்கையில் இளைஞனை கொலை செய்த சாரதி ; 32 ஆண்டுகளின் பின் கைதான சந்தேக நபர்

கொனவல பகுதியிலுள்ள ஒரு இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்துக்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக் கொலைச் சம்பவம் இடம்பெற்று சுமார் 32 வருடங்களின் பின் இச் சந்தேக நபர், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 63 வயதான கொனவல பட்டிவிலாவில் வசிக்கும் சாரதியாவார்.

Advertisement

குற்றப்பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து,  மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக் கொலைச் சம்பவமானது. 1993.10.25 ஆம் திகதி நடைபெற்றுள்ளது.

சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிவில, ஒவிலான வீதியைச் சேர்ந்த சூட்டி மல்லி எனப்படும் எச்.எம்.அஜித் பெரேரா எனும் இளைஞரே உயிரிழந்தவராவார்.

Advertisement

இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் முன்னர் கொனவல பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டிருந்தார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் பின்புலம் காரணமாக இக் கொலை தொடர்பில் யாரும் பொலிஸாருக்கு தகவல் வழங்க முன்வரவில்லை. இது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஒக்டோபர் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version