இலங்கை
ஒன்பது நாட்களில் 46,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
ஒன்பது நாட்களில் 46,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 46,868 ஐத் தாண்டியுள்ளது.
ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மொத்தம் 14,221 இந்தியர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 30.3% ஆகும்.
மேலும் இங்கிலாந்திலிருந்து 3,171 பேரும் ஜெர்மனியிலிருந்து 2,652 பேரும் சீனாவிலிருந்து 4,416 பேர் மற்றும் 2,158 பேர் பங்களாதேஷிலிருந்தும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.