இலங்கை
காத்தான்குடி இளைஞன் அதிரடியாக கைது
காத்தான்குடி இளைஞன் அதிரடியாக கைது
காத்தான்குடி பிரதேசத்தில் 10 கிராம் 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸார் நேற்று (10) நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது சந்தேக நபரான 28 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 10.150 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.