இந்தியா

தீபாவளி தொகுப்புடன் நிலுவையில் இருக்கும் இலவச அரிசி, கோதுமை வழங்க நடவடிக்கை: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

Published

on

தீபாவளி தொகுப்புடன் நிலுவையில் இருக்கும் இலவச அரிசி, கோதுமை வழங்க நடவடிக்கை: புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு காமராஜர் மணி மண்டபத்தில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிக நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் குறைகள் சொன்னால் அதையும் சரி செய்து உள் கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். மேலும்,  450 கோடி ரூபாயில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர் இலவச அரிசிக்கு டெண்டர் முடிந்த நிலையில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள இலவச அரிசி மற்றும் கோதுமைகள், தீபாவளி தொகுப்பிற்கு முன்னரே வழங்கப்படும் என்று தெரிவித்தார்.கடந்த ஆட்சியில் ஒரு சாலைகள் போடப்படவில்லை தற்போது பல்வேறு சாலைகள் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர் ரங்கசாமி, குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் 70 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.இந்த விழாவில் வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version