தொழில்நுட்பம்
பிக்சல் ஃபோல்ட் வாங்கினால் ரூ.10,000 கேஷ்பேக், 1 வருட ஜெமினி ஏ.ஐ ப்ரீ… கூகிளின் அட்டகாசமான விற்பனை சலுகை!
பிக்சல் ஃபோல்ட் வாங்கினால் ரூ.10,000 கேஷ்பேக், 1 வருட ஜெமினி ஏ.ஐ ப்ரீ… கூகிளின் அட்டகாசமான விற்பனை சலுகை!
பல வாரங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் 10 போன்கள், பிக்சல் பட்ஸ் 2ஏ, பிக்சல் வாட்ச் 4 ஆகியவற்றில், பிக்சல் 10 மற்றும் 10 ப்ரோ ஏற்கெனவே வெளியாகி, விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, அவற்றின் நம்ப முடியாத காட்சித் திரை, ஏ.ஐ அம்சங்கள் மற்றும் புகைப்படத்தில் சிறந்த கேமராக்கள் ஆகியவை தொழில்நுட்ப விரும்பிகளை கவர்ந்தன. இப்போது, அந்த வரிசையில் இருந்து மேலும் 2 சாதனங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் (Pixel 10 Pro Fold) மற்றும் ஸ்டைலான பிக்சல் பட்ஸ் 2ஏ (Pixel Buds 2a) ஆகியவையே அவை.பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட்புதிய பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட், அதன் முன்னோடி மாடலின் சிறப்பம்சங்களை தக்கவைத்துக்கொண்டாலும், ஹார்ட்வேர் மற்றும் மென்பொருள் ரீதியாக பல மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதயம் போன்ற செயலாக்கத்திற்கு, முற்றிலும் புதிய G5 டென்சார் சிப்செட் இந்த ஃபோனுக்கு சக்தி கொடுக்கிறது. மடிப்பும் திறனும் எளிதாக இருக்க, இதில் ‘கியர்-லெஸ்’ கீல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போனின் உள்ளே இருக்கும் ஆண்ட்ராய்டு 16 பதிப்பானது, கூகிளின் ஜெமினி ஏ.ஐ (Gemini AI) மூலம் தனித்துவமான மற்றும் புத்திசாலித்தனமான அம்சங்களைப் பொழிகிறது. இதனால், மற்ற ஃபோல்டபில் போன்களை விட இது தனித்து நிற்கிறது.விலை மற்றும் ஆஃபர்கள்பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு இரட்டை மகிழ்ச்சிதான். இதன் 256 ஜிபி வேரியன்ட் விலை ரூ.1,72,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, 1 வருடத்திற்கான ஜெமினி ஏஐ ப்ரோ இலவசமாக கிடைக்கிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 20,000 வரை சேமிக்கலாம். எச்டிஎஃப்சி (HDFC) வங்கி கார்டு பயன்படுத்தி வாங்கினால், ரூ.10,000 கேஷ் பேக் கிடைக்கும். இந்த ஃபோன் தற்போது கூகிளின் அதிகாரப்பூர்வமான ‘மேட் பை கூகிள்’ (Made By Google) இணையதளம் மூலம் நேரடியாக விற்கப்படுகிறது. பழைய பிக்சல் சாதனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்தால் சிறப்பு போனஸ் சலுகை உண்டு.பிக்சல் பட்ஸ் 2ஏமறுபுறம், மலிவு விலையில் ஆனால் அதிக அம்சங்களுடன் பிக்சல் பட்ஸ் 2ஏ வெளிவந்துள்ளது. இதன் விலை ரூ. 12,999 ஆகும். அதிக விலையுள்ள பிக்சல் பட்ஸ் 2 ப்ரோ-வின் அம்சங்களை ஒத்த இந்த இயர்பட்ஸ், செயல்திறனில் எந்தக் குறையையும் வைக்கவில்லை. இதில் டென்சார் ஏ1 சிப் உள்ளது. மேலும், ஹேண்ட்ஸ்-ஃப்ரீயாக ஜெமினி உதவியைப் பெறலாம். இது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி, IP54 நீர் எதிர்ப்பு திறன் (மழை மற்றும் வியர்வையில் கவலை இல்லை) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் ANC உடன் 7 மணிநேரம் கேட்கலாம். கேஸுடன் சேர்த்து மொத்தம் 20 மணிநேரம் வரை நீடிக்கும். இது கண்ணைக் கவரும் ‘ஐரிஸ்’ (Iris) மற்றும் ‘ஹேசல்’ (Hazel) ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த புதிய பிக்சல் சாதனங்கள் தொழில்நுட்ப ஆர்வலர்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.