பொழுதுபோக்கு
பிக்பாஸ் சீசன் 9: முதல் வார எவிக்ஷனில் வெளியேறியது இந்த பிரபலமா? 2-வது போட்டியாளரும் அவுட்
பிக்பாஸ் சீசன் 9: முதல் வார எவிக்ஷனில் வெளியேறியது இந்த பிரபலமா? 2-வது போட்டியாளரும் அவுட்
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி-யில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது 9-வது சீசனை எட்டியுள்ளது. முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்னதான் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த 5-ஆம் தேதி மிகபிரமாண்டமாக தொடங்கியது. இதில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கலையரசன், வி.ஜே.பார்வதி, ரம்யா ஜோ, அரோரா, ஆதிரை, கம்ருதீன், கெமி உட்பட 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் பிக்பாஸ் வீடு போர்களமாக மாறியுள்ளது. தினம் தினம் ஒவ்வொரு பிரச்சனைகள் வெடிக்கின்றது. எப்போது யார் பிரச்சனைகளை கிளப்புவார்கள் என்று யூகிக்கவே முடியாத மாதிரி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன.இந்த வாரம் எவிக்ஷன் நடைபெறவுள்ள நிலையில் போட்டியாளர் நந்தினி தன்னால் இந்த பொய்யான இடத்தில் இருக்க முடியாது என்று கூறி எவிக்ஷனுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும், இந்த வாரம் நாமினேஷனில் வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் கலையரசனை அதிகமானோர் நாமினேஷன் செய்த நிலையில் யார் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்தவாரம் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக முந்தைய சில சீசன்களில் முதல் வாரமென்றால் எவிக்ஷன் இல்லை என அறிவித்து சர்ப்ரைஸ் தருவார் பிக்பாஸ். அதுபோல் இந்த வருடமும் முதல் வார சலுகை இருக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருந்தாலும், இந்த வாரம் எவிக்ஷனுக்கான நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் அளித்த ஓட்டின் பேரில் பிரவீன் காந்தி வெளியாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.