பொழுதுபோக்கு

பொய்யா நடிக்க முடியாது, இங்க யாரும் ரியாலிட்டியா இல்ல; பிக்பாஸிடம் உண்மை சொன்ன நந்தினி!

Published

on

பொய்யா நடிக்க முடியாது, இங்க யாரும் ரியாலிட்டியா இல்ல; பிக்பாஸிடம் உண்மை சொன்ன நந்தினி!

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு ஆரம்பம் முதலே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் சுவாரஸ்யமான சம்பவங்களுக்கும் குறைவு இல்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில், இதில் பங்கேற்ற போட்டியாளர் நந்தினியின் செயல் பலருக்கும் ஆச்சரியத்தையும், ஆதரவையும் பெற்று தந்துள்ளது.பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் சாகும்போது எப்படி இருப்பார்கள் என போட்டியாளர்கள் ஜாலியாக பேசியபோது, மன அழுத்தத்தில் அழுத நந்தினி, இங்கு யாருமே ரியாலிட்டியா இல்ல, என்னால் உங்க மாதிரி நடிக்க முடியாது பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு சாப்பாட்டில் உப்பு அதிகமாக போட்டது குறித்து ஆவேகமாக நான் இங்கே இருக்க முடியாது என்று கத்திய அவர், உனக்கு சக்தி இருக்கு நீ ஜெயிப்ப என்று கலையரசனை பார்த்து கூறியுள்ளார்.இதன்பிறகு பார்வதி அவரை சமாதானம் செய்ய வர, அவருக்கு ஸ்பேஸ் கொடுங்க என்று துஷாரா சொல்ல, பார்வதி நந்தினி எவ்வளவோ கத்தினாலும் அவரிடம் இருந்து நகராமல் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். அதன்பிறகு காடன் ஏரியாவில், நீங்க உண்மையா இருக்கீங்க, இங்கிருந்து போக கூடாது என்று நந்தினியிடம் துஷாரா சொல்ல, நந்தினி நான் போயே ஆகணும் என்று விடாபிடியாக நிற்கிறார். நள்ளிரவு வரை நந்தினி கத்தி கூச்சல் போட்டுக்கொண்டு இருந்த நிலையில், பிக்பாஸ் அவரை கன்பர்சன் ரூமுக்கு அழைத்து விசாரித்தார்,அப்போது நந்தினி இங்க யாரும் ரியாலிட்டி இல்லை, என்னால் பொய் வாழ்க்கை நடத்த முடியாது என்று வெளிப்படையாக பேச நீங்கள் வெளியே போகலாம் என்று பிக்பாஸ் சொல்லிவிட்டார். ஆனால் இந்த வெளியேற்றம் உண்மையா அல்லது ட்விஸ்டா என்பது தெரியாத நிலையில், நந்தினி வெளியேறி இருந்தால், எலிமினேஷன் இன்று இருக்குமா என்ற சந்தேகமும் இருந்த நிலையில், இன்றைய எபிசோட்டில், விஜய் சேதுபதி நிகழ்ச்சிக்கு வந்தபோது நந்தினி இல்ல. இதனால் அவர் வெளியேறியது உண்மைதான் என்று கூறப்படுகிறது.அதேபால் இன்றைய நிகழ்ச்சியில், நந்தினி வெளியேறியதால், எலிமிஷேன் இல்லை. இதனால் நாளை எலிமினேஷ் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version