சினிமா

ஹனிமூனுக்காக காத்திருக்கிறேன்… திரிஷா வெளியிட்ட போஸ்ட் படுவைரல்.!

Published

on

ஹனிமூனுக்காக காத்திருக்கிறேன்… திரிஷா வெளியிட்ட போஸ்ட் படுவைரல்.!

தமிழ் திரையுலகின் அழகு தேவதையாகவும், ரசிகர்கள் மனதில் அழிக்க முடியாத இடம் பிடித்த நட்சத்திரமாகவும் நீண்ட காலமாக நிலைத்திருப்பவர் நடிகை த்ரிஷா கிருஷ்ணன். ‘96’, ‘கில்லி’, ‘சாமி’ என தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் நாயகியாக திகழ்ந்துள்ள த்ரிஷா, இப்போது மீண்டும் தனது அழகு மற்றும் நடிப்பால் ரீஎன்ட்ரி கொடுத்து வருகின்றார்.இத்தனை ஆண்டுகளாக திரையுலகத்தில் ஓர் அழிவில்லா பிரபலமாக இருந்து வரும் த்ரிஷாவை சுற்றியுள்ள வதந்திகளும் அந்த அளவிற்கே அதிகமாக பரவுகின்றன. இதன் அடிப்படையில், கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரவி வந்த ஒரு முக்கியமான செய்தியாக த்ரிஷா விரைவில் ஒரு பஞ்சாப் தொழிலதிபரை திருமணம் செய்யவிருக்கிறார் என்பது காணப்படுகின்றது. இச்செய்தி எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லாமலேயே, பல ஊடகங்களில் பரவ ஆரம்பித்தது. இதன் பின், “திருமணம் பெங்களூருவில் நடைபெறும்.. தொழிலதிபர் கோடீஸ்வரர் தான் மாப்பிள்ளை…” போன்ற தகவல்களும் பரவின.இந்த வதந்திகளுக்கு தற்பொழுது திரிஷா நக்கலான பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், ” பிறர் எனக்காக என் வாழ்க்கையைத் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்…. அவர்கள் தேனிலவையும் திட்டமிடுவதற்காக காத்திருக்கிறேன்…” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version