பொழுதுபோக்கு
அழுது, புலம்பி வெளியேறிய நந்தினி; 5 நாளில் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? பிக்பாஸ் அப்டேட்!
அழுது, புலம்பி வெளியேறிய நந்தினி; 5 நாளில் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? பிக்பாஸ் அப்டேட்!
சின்னத்திரையின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இந்த ஆண்டு எவ்வளவு சர்ச்கைகள் எழுந்துள்ளதோ அந்த அளவிற்கு, ஆச்சரியத்தையும் கொடுத்து வருகிறது. அதில் அவ்வப்போது தொடக்கத்திலேயே போட்டியாளர்கள் என்னால் இங்கு இருக்க முடியாது என்று சொல்லி வெளியேறிவிடுவார்கள் அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள நந்தினி என்ன சம்பளம் பெற்றுள்ளார் தெரியுமா?விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் கடந்த 8 சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெரும் சர்ச்சைகளும், கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், போட்டியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் தான். குறிப்பாக எவ்வித திறமையும் இல்லாமல் சமூகவலைதளங்களில் கோமாளி போல் வீடியோக்களை வெளியிட்டவர்கள் எல்லாம் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கிறார்கள் என்பது தான் பலரின் கருத்தாக உள்ளது.சர்ச்கைகள், கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், என்ன நடக்கிறது என்பது குறித்து, நெட்டிசன்கள் தங்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருவது தொடர்ந்து வருகிறது. இதனிடையே நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில், போட்டியாளர் நந்தினி தன்னால் இங்கு இருக்க முடியாது, பொய்யான வாழ்க்கையை என்னால் வாழ முடியாது என்று கூறிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். நிகழ்ச்சியில் இருந்த தானாக வெறியேறிய நந்தினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள் ஒருசிலரை தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள் தான், பெரும்பாலும் இவர்கள் சமூகவலைதளங்களில் இருந்து வந்தவர்கள். இதனால் எப்படியாவது தங்களின் திறமையை வெளிப்படுத்தி இங்கே பெயர் பெற்றுவிட வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக உள்ளது. இதனால் அனைவருமே தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து வருகின்றனர். இதை பார்த்த நந்தினி, இங்கு யாரும் ரியாலிட்டி இல்லை, என்னால் பொய் வாழ்க்கை நடத்த முடியாது என்று பிக்பாஸிடம் கூறியுள்ளார்.அவரின் பேச்சை கேட்ட பிக்பாஸ், நீங்கள் வெளியே போகலாம் என்று பிக்பாஸ் சொல்லிவிட, நந்தினி உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் 5 நாட்கள் தங்கியிருந்த நந்தினி வாங்கி இருக்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பலருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், தற்போது அவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவருக்கு, ஒரு நாளைக்கு ரூ1000 என்ற அடிப்படையில் 5 நாட்களுக்கும் சேர்த்து, ரூ 5000 சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.