இலங்கை

காதலிக்காக மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

Published

on

காதலிக்காக மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கணவன் காதலிக்காக மனைவியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளந்தா மாவட்டத்தில் வசிக்கும் விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

Advertisement

திருமணம் முடிந்த பின்பு தான் விகாஸ் குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இருப்பதும், அப்பெண்ணை விவாகரத்து செய்யாமல் 2 ஆவது திருமணம் செய்ததும் சுனிதாவுக்கு தெரியவந்தது.

ஆனால் சுனிதா குடும்பத்தினர் அவரை சம்மதிக்க வைத்து விகாஸ் குமாருடன் ஒன்றாக வாழ வைத்தனர். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன.

இதையடுத்து விகாஸ் குமார் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாகவும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் சுனிதாவிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனால் ஏற்பட்ட சண்டையில் சுனிதா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

அதன்பின்பு சுனிதா வீட்டுக்குச் சென்று அவரை மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு விகாஸ் வற்புறுத்தியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் சுனிதா மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரித்துக் கொன்றுள்ளார்.

Advertisement

தீயில் கருகிய உடலை மீது பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ள காவல்துறையினர் இந்தக் கொலை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version