பொழுதுபோக்கு

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை உதறி ஆசிரம வாழ்க்கை… நிஜத்தில் இவர் ஒரு ‘பாபா’; யார் தெரியுமா?

Published

on

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை உதறி ஆசிரம வாழ்க்கை… நிஜத்தில் இவர் ஒரு ‘பாபா’; யார் தெரியுமா?

நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர் வினோத் கண்ணா. பாலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த இவர் கடந்த 1968-ஆம் ஆண்டு சுனில் தத் நடித்த ’மன் கா பிரீத்’ என்ற திரைப்படத்தின் மூலம் வில்லனாக திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திரா போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றி குறுகிய காலத்தில் -இந்தி சினிமாவின் மிகவும் விரும்பப்படும் நட்சத்திரங்களில் ஒருவரானார். 1980-களின் முற்பகுதியில் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். இப்படி சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர் வினோத் கண்ணா.  கடந்த 1971-ஆம் ஆண்டு காதலி கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ராகுல் மற்றும் அக்சய் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இப்படி சினிமாவில் முன்னணியில் இருந்த நடிகர் வினோத் கண்ணா தனது வாழ்க்கையையே மாற்றும் ஒரு முக்கிய முடிவை எடுத்தார். ஓஷோவின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட வினோத் கண்ணா தனது சினிமா தொழில், குடும்பம் உட்பட அனைத்தையும் விட்டுவிட்டு புனேவில் உள்ள ஓஷோவின் ஆசிரமத்தில் வசிக்கச் சென்றார். அவரின் இந்த செயல் சினிமா உலகையும் அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் அவரின் மனைவி கீதாஞ்சலி தங்களது இரண்டு மகன்களையும் தனியாளாக கவனித்துக் கொண்டார். இதுதான் கணவன் – மனைவிக்கு இடையில் நிரந்தர பிரிவுக்கு வழிவகுத்தது. சில ஆண்டுகள் கழித்து மும்பைக்கு திரும்பிய வினோத் கண்ணா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ’தயாவன்’, ’சாந்தினி’ மற்றும் ’ஜூர்ம்’ போன்ற படங்களில் மறக்க முடியாத வேடங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் மீண்டும் வெற்றிகரமாக நுழைந்தார்.நடிகர் வினோத் கண்ணா கடந்த 1990-ஆம் தொழிலதிபர் ஷரயு தஃப்தரி மகளான கவிதா தஃப்தரியை மறுமணம் செய்து கொண்டார். நடிகர் வினோத் கண்ணா கடந்த 2017-ஆம் ஆண்டு உடல் நலப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இயற்கை ஏய்தினார். இவரின் மகன் அக்சய் கண்ணாவும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version