சினிமா

திருவண்ணாமலையில் காலடி எடுத்து வைத்த… அடுத்த நிமிஷமே வாய்ப்பு கிடைத்தது.! கிரிஷ் ஓபன்டாக்

Published

on

திருவண்ணாமலையில் காலடி எடுத்து வைத்த… அடுத்த நிமிஷமே வாய்ப்பு கிடைத்தது.! கிரிஷ் ஓபன்டாக்

தமிழ் சினிமாவில் தனித்துவமான குரலுடன் பல ஹிட் பாடல்களை வழங்கிய பாடகர் கிரிஷ், தற்போது தனது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு நம்ப முடியாத ஆன்மிக அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறும் வார்த்தைகள் சினிமா உலகிலும், ஆன்மிகத்திலும் நம்பிக்கையின் சக்தியை நிரூபிக்கின்றன.அதன்போது கிரிஷ், “சினிமால பாட நிறைய பேர் கிட்ட பட வாய்ப்பு கேட்டேன்… வாய்ப்பு கிடைக்கல. அமெரிக்கால இருக்குற நண்பன் கணேஷ் கிட்ட சொன்னேன். 10 வருஷமா ட்ரை பண்ணுறேன்… ஆனாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கல…” என்று கூறினார். மேலும் அவர், “அந்த நண்பர் எங்க ஊருக்கு ஒரு வாட்டி வாங்க..வந்து சாமிய பாருங்க நல்ல மாற்றம் வருமுன்னு சொன்னார். நானும் அமெரிக்காவில இருந்து வந்த ரெண்டு நாளில திருவண்ணா மலைக்கு பஸ்லேயே போனேன். சொன்னா நம்ப மாட்டீங்க. பஸ்ல இருந்து திருவண்ணாமலைக்கு காலடி எடுத்து வைச்சேன். ஒரு போன் வருது நான் கணேஷ் பேசுறேன் ஹாரிஸ் சாருக்கு உங்க voice பிடிச்சிருக்கு ரெண்டு நாளில ரெக்காடிங் பண்ண கூப்பிடுவாங்க ரெடியா இருங்க என்று… அன்றிலிருந்து என்னோட தலம் அதுதான். வருஷத்திலே 2 தடவை தன்னும் திருவண்ணாமலைக்கு போய்ட்டு வருவேன்…” எனவும் தெரிவித்திருந்தார்.இந்த செய்தி ஒரு கலைஞனுக்கான வாய்ப்பு எப்படி கிடைக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. கிரிஷ் எதையும் எதிர்பார்க்காமல், ஆன்மிக நம்பிக்கையுடன் பாதையை தேடியதும் அவரின் கனவுகள் நிஜமானதென்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version