இலங்கை
நாரம்மலவில் இடம்பெற்ற கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!
நாரம்மலவில் இடம்பெற்ற கோர விபத்து – இருவர் உயிரிழப்பு!
நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொறியின் சாரதி கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் பின்புறத்தில் பயணித்த இருவர் காயமடைந்து லொறியிலேயே நசுங்கி நாரம்மல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்கள் ஆவர்.
விபத்து தொடர்பாக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை