பொழுதுபோக்கு

பச்சை நிற கண்கள், அதில் கொஞ்சம் பழுப்பு நிறம்; உன் அம்மாவுக்கு நன்றி: மகளுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து!

Published

on

பச்சை நிற கண்கள், அதில் கொஞ்சம் பழுப்பு நிறம்; உன் அம்மாவுக்கு நன்றி: மகளுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து!

தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனம் ஈர்த்துள்ள நிலையில், தனது மகளின் வித்தியாசமான கண்கள் குறித்து கமல்ஹாசன் சிலாகித்து பதிவிட்டுள்ளார்.பாலிவுட்டில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ் – அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ஷமிதாப் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அக்ஷரா ஹாசன். அதன்பிறகு, ஒரு இந்தி படத்தில் நடித்த அவர், அடுத்து 2017-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அடுத்து 2019-ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியாக கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.ராஜேஷ் எம்.செல்வா இயக்கிய இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார், அதன்பிறகு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற படத்தில் நடித்திருந்த அக்ஷரா அடுத்து அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அக்ஷரா இன்று தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக அவரது அப்பாவும், நடிகரும், மாநிலங்களை எம்.பியுமான கமல்ஹாசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதில்,அன்புள்ள அக்‌ஷரா,நான் முதன்முதலில் உன் கண்களைப் பார்க்கவில்லை. நீ உறங்கிக் கொண்டிருந்தாய். உன் தாயின் பச்சைப் பசேலென்ற கண்களை நான் பார்த்தபோது, இவ்வளவு அற்புதமான பரிசைக் (உன்னை) கொடுத்ததற்காக அவருக்கு நன்றி சொன்னேன். உன் அம்மா உனக்கு அவருடைய கண்கள் இருப்பதாக என்னிடம் கூறினார். பிறகு உற்றுப் பார்த்தபோது, என்னுடைய பழுப்பு நிறமும் சிறிதளவு அதில் கலந்திருப்பதைக் கண்டேன். இவையெல்லாம் பெற்றோர்கள் குழந்தைத்தனமாக உரிமை கொண்டாடும் எளிய ஒற்றுமைகள். அவை இருக்கட்டும்.pic.twitter.com/h8lRQWwy0Uஉருவத்திலும் சரி, சிந்தனையிலும் சரி நீ ஒரு அழகான மனிதராக வளர்ந்துவிட்டாய். உனக்குள்ளிருக்கும் குழந்தையையும் நீ பாதுகாத்து வைத்திருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்தக் குழந்தையும் என்னுடையதுதான். அவளை பத்திரமாகக் காப்பாற்றிக்கொள். பிறந்தநாள் வாழ்த்துகள், அக்‌ஷரா! என்று கமல்ஹாசன் தனது மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துககளை கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version