இந்தியா
பணி நிரந்தரம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கை: புதுச்சேரியில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கை: புதுச்சேரியில் அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 175 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துவிட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் மீதமுள்ள பணியிடங்களை மட்டும் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், உதவியாளர்களுக்கு ஓர்க்கர் பதவி உயர்வு, ஓர்க்கர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் செயலாளர் தமிழரசி தலைமை தாங்கினார். சம்மேளனத்தின் செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் முனுசாமி, அமைப்பு செயலாளர் சிவஞானம், ஆலோசகர் ஆனந்த கணபதி, அங்கன்வாடி சங்கத்தின் தலைவர் ராஜலட்சுமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். பொருளாளர் செல்வராணி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் சம்மேளனத்தின் துணை தலைவர் வேலய்யன், அலுவலக செயலாளர் செல்வக்குமார், செயலவை உறுப்பினர் தமிழ்செல்வம், செய்தி தொடர்பாளர் நமச்சிவாயம், சங்கத்தின் நிர்வாகிகள் அனுசுயா, குப்புலட்சுமி சத்யா, நிர்மலா, மஞ்சுளா, சூசை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி