இந்தியா
புதுச்சேரி பல்கலை. பாலியல் புகார்: பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் கோரிக்கை; ஆர்.டி.ஐ சட்டம் பலவீனப்படுத்தப்படுவதாகக் கண்டனம்!
புதுச்சேரி பல்கலை. பாலியல் புகார்: பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் கோரிக்கை; ஆர்.டி.ஐ சட்டம் பலவீனப்படுத்தப்படுவதாகக் கண்டனம்!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது ”நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்து 21 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம், காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நலம் சார்ந்த பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டது, ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் அதை செயல்படுத்தாமல் பலவீனப்படுத்துவதாக வைத்திலிங்கம் குற்றம் சாட்டினர். பல்வேறு மாநிலங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் 11 ஆணையர்கள் நியமிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். ஒன்பது இடங்கள் காலியாக உள்ளது. இதனால் தகவல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், தகவல் அரியும் உரிமை சட்டத்தின் பல தகவல்களை கொடுக்காமல் மறைப்பதற்காகவே ஆணையர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அமைப்பினை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட வைத்திலிங்கம்,நேர்மையான நியாயமான வெளிப்படையான அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் காங்கிரஸ் அரசாங்கம் சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் தற்போது பாஜக அரசாங்கம் தகவல் தருவதையே மறுத்து வருகிறது என்றார்.பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் எனவும் குற்றம் சாட்டப்பட்ட கல்லூரி பேராசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பேட்டியின் போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ மற்றும் மூத்த தலைவர் பி.கே. தேவதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.செய்தி – பாபு ராஜேந்திரன், புதுச்சேரி