பொழுதுபோக்கு

பெண் சூப்பர் ஹீரோ, ஓ.டி.டிக்கு வரும் கள்ளியான்காட்டு நீலி; ‘லோகா’ எந்த தளத்தில் ரிலீஸ்?

Published

on

பெண் சூப்பர் ஹீரோ, ஓ.டி.டிக்கு வரும் கள்ளியான்காட்டு நீலி; ‘லோகா’ எந்த தளத்தில் ரிலீஸ்?

மலையாளத்தில் வெளியாகி இந்திய சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்ற கல்யாணி பிரியதர்ஷனின் லோகா சாப்டர் 1 சந்திரா திரைப்படம் திரையரங்கு வசூல் வேட்டையை தொடர்ந்து அடுத்து ஒ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்கள் எடுப்பதில் முன்னணியில்இருக்கும் மலையாள திரையுலகில், ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான திரைப்படங்கள் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 28-ந் தேதி வெளியான படம் லோகா சாப்டர் 1 சந்திரா. இந்தியாவின் முதன் பெண் சூப்பர் ஹீரோ படமான இந்த படத்தில் கள்ளிக்காட்டு நீலி என்ற கேரக்டரில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார்.துல்கர்சல்மான் தயாரிப்பில் வெளியான இந்த படம், மலையாள சினிமாவின் அனைத்து முக்கிய பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் தகர்த்தெறிந்துள்ளது. இன்று இப்படம், மொத்தமாக ரூ.300 கோடி வசூல் என்ற மைல்கல்லைத் தாண்டி, இந்த சாதனையைப் படைத்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதன் அற்புதமான ஓட்டத்தில் பல புதிய சாதனைகளையும் இப்படம் நிகழ்த்தியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர்களான வேஃபரர் பிலிம்ஸ், படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை தளத்தை உறுதி செய்துள்ளனர்.டொமினிக் அருண் இயக்கிய இயக்கத்தில் வெளியான லோகா படத்தின் ஒடிடி உரிமையை ஜியோஹாட்ஸ்டார் பெற்றுள்ளதுடன், இந்த மாதத்தின் கடைசி வார இறுதியில் படத்தின் பிரீமியர் திரையிடப்பட உள்ளது. வேஃபரர் பிலிம்ஸில் முக்கிய பங்கு வகிக்கும் துல்கர் சல்மான் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த மாதம், படம் 4-வது வாரத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது, லோகா சாப்டர் 1: சந்திரா திரைப்படம், இவ்வளவு சீக்கிரம் ஒடிடியில் வெளியாகாது என்று சமூக ஊடகங்களில் அவர் ஒரு பதிவை வெளியிட்டு தெளிவுபடுத்தியிருந்தார்.இன்றைய காலகட்டத்தில், ஒரு திரைப்படம், ஐந்து வாரங்களுக்கு மேல் ஓடுவதே மிகவும் அரிதானது. ஆனால், லோகா சாப்டர் 1: சந்திரா திரைப்படம் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பான பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்து சாதித்துள்ளது. மோகன்லால் நடித்த தொடரும் படத்திற்குப் பிறகு கேரளாவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த இரண்டாவது மலையாளப் படம் இதுவாகும். மேலும், 5வது வாரத்தில் அதிக வசூல் செய்த படமாகவும் உள்ளது. லோகா சாப்டர் 1: சந்திரா, மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் சாதனையை முறியடித்து, இந்தியாவில் அதிக வசூல் செய்த மலையாள படமாகவும் மாறியுள்ளது. இருப்பினும், வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த வாழ்நாள் சாதனையாக எம்புரான் திரைப்படம் முன்னணியில் இருக்கிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version