சினிமா
“பைசன்” படக்குழுவின் வித்தியாசமான விளம்பர உத்தி.. மக்களிடம் எடுபடுமா.?
“பைசன்” படக்குழுவின் வித்தியாசமான விளம்பர உத்தி.. மக்களிடம் எடுபடுமா.?
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக, படக்குழுக்கள் புது புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். ஸ்டைலிஷான ப்ரோமோஷன்கள், சினிமா ஹால் ஆடம்பரங்கள் என்று பட்டியல் நீளமாகவே செல்லும்.அந்த வகையில், தற்போது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘பைசன்’ திரைப்படக் குழு, வித்தியாசமான பாணியில் தங்கள் படத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல புது முயற்சியை எடுத்துள்ளனர்.மாரி செல்வராஜ் என்றால் சமூகத்தில் வலிந்து அடக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வரக்கூடிய இயக்குநர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. “பரியேரும் பெருமாள்”, “கர்ணன்” போன்ற சமூகக் கருத்துக்களோடு கூடிய ஆழமான திரைப்படங்களை இயக்கிய இவர், இப்போது துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைசன்’ படத்தின் மூலமாக மீண்டும் ஒரு மாறுபட்ட முயற்சியுடன் திரையில் களமிறங்குகிறார்.அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ள இந்த படம், தமிழ்த் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை விக்ரமின் பாணியில், துருவ் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. பொதுவாக, சினிமா விளம்பரங்கள் பல்வேறு ஊடகங்கள் மூலமாக பரவுவது வழக்கம். ஆனால் ‘பைசன்’ படக்குழு எடுத்துச் சென்ற தனியார் பேருந்து விளம்பர யுக்தி, தமிழ்சினிமாவில் ஒரு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.அந்தவகையில், தனியார் பேருந்தின் வெளியே, பைசன் திரைப்படத்தின் போஸ்டர் விளம்பரம் செய்யப்பட்டதுடன், திரையரங்குகளின் வாசலில், பைசன் படத்திற்கே உரிய ‘காளை மாடு’ சிலை வைக்கப்பட்டு, அந்தப் படத்தின் கதையை பிரதிபலிக்கும் வகையில் காட்டப்பட்டுள்ளது. இந்த முயற்சி பார்ப்பவர்களுக்கு ஒரு உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது.