இலங்கை

மட்டக்களப்பு பகுதியில் யானைகள் அட்டகாசத்தால் பெண்ணொருவர் கவலைக்கிடம்

Published

on

மட்டக்களப்பு பகுதியில் யானைகள் அட்டகாசத்தால் பெண்ணொருவர் கவலைக்கிடம்

மட்டக்களப்பு, உன்னிச்சை குளத்தை அண்டிய பகுதியில் இன்று (12) அதிகாலை மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் 10 இற்கும் மேற்பட்ட வீடுகளை முற்றாகவும் பகுதியளவிலும் சேதப்படுத்தியுள்ளதுடன், பல பயன் தரும் மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

உன்னிச்சை பகுதியை சேர்ந்த வயோதிப பெண்ணொருவர் இன்று அதிகாலை தாக்குதலுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisement

வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை, இருநூறுவில், நெடியமடு, ஆறாம் கட்டை மற்றும் எட்டாம் கட்டை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக யானைகள் தொடர்ச்சியாக உயிர் அச்சுறுத்தலை மேற்கொண்டு வருவதுடன், குடியிருப்புக்கள், வயல் வாடிகள் உள்ளிட்ட பயன் தரும் மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version