இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Published

on

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Advertisement

வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சரின் தூண்டுதலின் பேரில் நிறுவப்பட்ட இந்த பொலிஸ் பிரிவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி செய்பவர்கள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகளை பெறுவதாக கூறப்படுகின்றது.

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பணியகம் கூறுகின்றது.

மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் அல்லது தனிநபர்கள் பற்றிய தகவல்கள் உள்ள எவரும் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் கீழ் நிறுவப்பட்ட பொலிஸ் பிரிவுக்கு 0112882228 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொள்கின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version