இலங்கை

5 ஆண்டுகளாக இலங்கையில் தாயை தேடி திரியும் டென்மார்க் குடிமகன்

Published

on

5 ஆண்டுகளாக இலங்கையில் தாயை தேடி திரியும் டென்மார்க் குடிமகன்

ஐரோப்பிய நாடான டென்மார்கில் வசித்து வரும் குடும்பஸ்தர் ஒருவர், இலங்கையில் தனது தாயை 5 ஆண்டுகளாக தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டென்மார்க் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட 40 வயதான டோர்டன் மேயர் என்பவரே தனது உயிரியல் பெற்றோரை தேடி வருகின்றார்.

Advertisement

டென்மார்க் பெற்றோர் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் தாயை தேடி வருவதாகவும், எனினும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என குறித்த நபர் குறிப்பிட்டார்.

இந்தியாவை பூர்விமாக கொண்ட முகமது சாலி மரிக்கார் சித்தி ஜெசிமா என்ற பெயருடைய தாயிற்கு தான் பிறந்தாக குறிப்பிட்டுள்ளார்.

தாய் 21 வயதில் இருக்கும்போது தான் பிறந்ததாகவும், ஒன்றரை வயதாக இருக்கும் போது டென்மார் தம்பதிக்கு தான் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தற்போது அவருக்கு சுமார் 61 வயது இருக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஒரு பணக்கார வீட்டில் பணிபுரியும் போது என் தாய் கர்ப்பமாக இருந்தார்.

பதிவுகளில் எனது உயிரியல் தந்தையை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

Advertisement

எனது தத்தெடுப்பு ஆவணங்களின்படி, நான் கொழும்பு காசல் வீதியில் உள்ள மருத்துவமனை அல்லது டி சோய்சா மகளிர் மருத்துவமனையில் பிறந்தாக இரண்டு ஆவணங்கள் உள்ளன.

எனது தத்தெடுப்பு ஆவணங்களில் எனது பெற்றோரின் வசிப்பிடத்தின் குறிப்பிட்ட முகவரி இல்லாததால், எனது தாயைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

இந்நிலையில் குறித்த நபர் தனது உயிரியல் தாயை கண்டுபிடிக்க உதவுமாறு ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version