இலங்கை

இந்த ராசிகாரர்களுக்கு தீபாவளிக்கு பிறகு பேரதிஷ்டம் காத்திருக்கு ; உங்க ராசியும் இருக்கா?

Published

on

இந்த ராசிகாரர்களுக்கு தீபாவளிக்கு பிறகு பேரதிஷ்டம் காத்திருக்கு ; உங்க ராசியும் இருக்கா?

2025 தீபாவளி பண்டிகையொட்டி நவகிரகங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ உள்ளன. இந்த மாற்றங்கள் 12 ராசிகளுக்கும் பல்வேறு விதமான தாக்கங்களை கொடுக்க உள்ளது.

அந்த வகையில் தீபாவளி பண்டிகையொட்டி நடக்கவிருக்கும் குரு வக்ர பெயிற்சியால் எந்த மூன்று ராசிகளுக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றமும் பணமும் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்.

Advertisement


மீனம்:

மீன ராசிக்கு குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று லக்னத்தை பார்க்கும் பொழுது இவர்களுக்கு மிக சிறப்பான பலனை கொடுக்கிறார். ஏழரை சனியால் கஷ்டப்பட்டு வரும் இவர்களுக்கு நல்ல மாற்றம் பெற்று முன்னேற்றம் கிடைக்கும். பணரீதியாக சந்தித்து வந்த அனைத்து பிரச்சனைகளும் இவர்களுக்கு தீர்வை தரப் போகிறது.


விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பாக்கியஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று லக்னத்தை பார்ப்பதால் மிக சிறப்பான அமைப்பு உண்டாகும். ஆதலால் இவர்களுக்கு இந்த பலன் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களையும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்களையும் கொடுக்கப் போகிறது. இவர்களுக்கு மனதளவில் தைரியமும் தெளிவும் பெறக்கூடிய அற்புதமான காலமாகும்.


மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயிற்சியானது வாழ்க்கையில் உள்ள குழப்பங்களை போக்கி நல்ல தெளிவான சிந்தனையை கொடுத்து வேலையில் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் அற்புதமான காலகட்டமாகும். சொத்துக்களில் இருந்த பிரச்சனை விலகுகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version