பொழுதுபோக்கு

என்னை பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா; மனைவி பற்றி மனம் திறந்த பிரபு: எம்.ஜி.ஆர் பேனா ரகசியம்!

Published

on

என்னை பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா; மனைவி பற்றி மனம் திறந்த பிரபு: எம்.ஜி.ஆர் பேனா ரகசியம்!

என்னை புடிக்காமத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஆனால் எம்.ஜி.ஆர் கொடுத்த பேனா வைத்து தான் பி.ஏ தேர்வு எழுதினாள் என்று தனது மனைவியை பற்றி பேசியுள்ள நடிகர் பிரபு, எடிம்.ஜி.ஆர் கொடுத்த அந்த பேனாவை இன்னும் தான் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரபு. 1982-ம் ஆண்டு வெளியான சங்கிலி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பிரபு, தொடக்கத்தில் தனது அப்பா சிவாஜியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். கங்கை அமரன் இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் கோழி கூவுது படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை சில்க் ஸ்மிதாவின் ஜோடியாக நடித்திருந்தார்.அதன்பிறகு, பல படங்களில் நடித்த பிரபு, ரஜினியுடன் குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கமல்ஹாசனுடன் வெற்றி விழா உள்ளிட்ட படங்களிலும் சின்னத்தம்பி, உத்தமராசா, கன்னிராசி, ராஜகுமாரன், டூயட், பரம்பரை என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பந்தா பரமசிவம், எஸ் மேடம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்த பிரபு, தற்போது கேரக்டர் நடிகராக மாறியுள்ளார். சமீபத்தில் வெளியான் கிஸ் படத்தில் கூட நடித்திருந்தார்.தனது அப்பா சிவாஜி புகழ் பெற்ற நடிகராக இருந்தாலும், பிரபு உண்மையில் தன்னை ஒரு எம்.ஜி.ஆர் ரசிகன் என்று பல மேடைகளில் கூறியுள்ளார். அந்த வகையில் நேர்காணல் ஒன்றில், எம்.ஜி.ஆரை முதன் முதலில் சந்தித்தது குறித்து பேசியுள்ள பிரபு, நான் 3-4 படங்களில் நடித்திருப்பேன் கோழி கூவுது படம் முடிந்த டைம். இலங்கை தமிழருக்காக அப்பா நிதி கொடுக்க சொன்னார் என்று ஒரு லட்ச ரூபாய் எடுத்து சென்றேன். கூடவே என் சார்பில் ரூ10000 கொடுத்தேன். அதை பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர் ஒரு ரூபாய் ஆனாலும் பெரிய விஷயம் என்று சொன்னார்.அதன்பிறகு முதல் முறையாக என்னை பார்க்க வந்துருக்கல்ல, என்ன சாப்பிடுற என்று கேட்டார். நான் டீ, காபி என்று சொல்ல, அதெல்லாம் சாப்பிட கூடாது, போன்வீட்டா, ஹார்லிக்ஸ், பூஸ்ட், ஓவல் ஹெல்த் ட்ரிங்தான் சாப்பிடனும். ஷூட்டிங்ல பைட் சீன் ரொம்ப ரிஸ்க் எடுக்கிறியாமே, ஸ்டூடியோவில் கை தட்டுவது பெரிய பெரிய விஷயம் இல்ல, ஆடியன்ஸ் கை தட்டனும், அதற்கு ஆரோக்கியமாக இருக்கணும், இனிமேல் ரிஸ்க் எடுக்காதே என்று சொன்னார். அதன்பிறகு முதல் முறையாக நான் அவரை பார்க்க வந்திருப்பதால் ஒரு பேனாவை பரிசாக கொடுத்தார்.அந்த பேனாவை வைத்து தான் என் மனைவி பி.ஏ எழுதினார். என்னை பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா, அந்த பேனாவை வைத்து பி.ஏ எழுதுனா, அதில் ஒரு லக் இருந்துச்சு, அந்த பேனாவை இன்னும் நான் வைத்திருக்கிறேன் என்று பிரபு மனம் திறந்து பேசியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version