சினிமா
‘காந்தாரா சாப்டர் 1’ மாபெரும் வெற்றி.. குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கும் ரிஷப் ஷெட்டி
‘காந்தாரா சாப்டர் 1’ மாபெரும் வெற்றி.. குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கும் ரிஷப் ஷெட்டி
கன்னடத் திரையுலகிற்கு பெருமை சேர்த்த திரைப்படங்களில் ஒன்றுதான் காந்தாரா. கடந்த 2002 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகமான ‘காந்தாரா சாப்டர் 1’ கடந்த வாரம் திரைக்கு வந்தது. ரிஷப் ஷெட்டி இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். காந்தாரா படத்தின் முதல் பாகத்தை விடவும் இதன் இரண்டாவது பாகம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. ‘காந்தாரா சாப்டர் 1’ இதுவரையில் கிட்டத்தட்ட 590 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த படம் அனைத்து மொழிகளிலும் முன்னேறிக்கொண்டே உள்ளது. இதனால் பல்வேறு மொழி ஊடகங்களிலும் இருந்து ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்தவாறு உள்ளன. கன்னட திரை உலகை மிகப் பெரிய அளவுக்கு கொண்டு சென்ற பெருமை ரிஷப் ஷெட்டிக்கே சாரும். இதனாலேயே பிற மொழி பேசும் ஸ்டார், நடிகர்களும் பாராட்டுகளை பொழிந்து வருகின்றனர்.இந்த நிலையில் , இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி தனது விடுமுறையை குடும்பத்தினருடன் கழித்து வருகின்றார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.