டி.வி
குடும்பத்தை இணைக்க பிளான் பண்ணும் கதிர்… மீனாவோட பிரச்சனையைத் தொடங்கிய செந்தில்..!
குடும்பத்தை இணைக்க பிளான் பண்ணும் கதிர்… மீனாவோட பிரச்சனையைத் தொடங்கிய செந்தில்..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பழனி கதிரோட ட்ராவெல்ஸிற்குப் போய் அம்மாவுக்கு பிறந்த நாள் வரப்போகுது அதுதான் கோவிலுக்கு போய் அர்ச்சனைக்கு சொல்லிட்டு அப்புடியே உன்னையும் பாத்திட்டு போலாம் என்று வந்தேன் என்கிறார். மேலும் இது எங்க அம்மாவுக்கு 75வது பிறந்தநாள் என்றதால இந்த வருஷம் ரொம்பவே ஸ்பெஷல் என்கிறார் பழனி. அதைக் கேட்ட கதிர் நீங்க ஏதும் அம்மாச்சிக்கு வாங்கி கொடுக்க வேணாமா என்று கேட்க்கிறார்.அதுக்கு பழனி என்கிட்ட அப்புடி எல்லாம் வாங்கிக் கொடுக்க காசில்ல என்கிறார். பின் கதிர் பழனிக்கு தான் காசு கொடுக்கிறேன் என்று சொல்லுறார். அதனை அடுத்து பழனி எங்க அம்மாவுக்கு குடும்பம் எல்லாம் ஒன்னா சேரணும் என்று தான் ஆசை அது நடக்குமா என்று கேட்க்கிறார். பின் கதிர் அது கொஞ்சம் கஷ்டம் தான் என்கிறார். மறுபக்கம் மீனா குடும்பத்தை நினைத்துப் பார்த்து அழுது கொண்டிருக்கிறார். அதனை அடுத்து ராஜி குமார் பிறந்த நாளுக்கு வரச் சொன்ன விஷயத்தைப் பற்றி யோசிச்சுக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து கதிர் அங்க வந்து தனியா யாருகிட்ட பேசிட்டு இருக்கிற என்று கேட்க்கிறார். பின் கதிர் அம்மாச்சிக்கு பிறந்த நாள் வரப்போகுது நம்ம குடும்பத்தில இருக்கிற எல்லாரும் ஒன்னா சேரனும் என்று அம்மாச்சிக்கு ஆசை இருக்கு அதை நான் நடத்திக் கொடுப்பேன் என்கிறார்.இதனை அடுத்து மீனா செந்திலைக் காணேல என்று தேடிக் கொண்டிருக்கிறார். பின் செந்தில் குடிச்சுக் கொண்டு வீட்ட வந்து நிக்கிறார். அதைப் பார்த்த மீனா நான் தனியா இருக்கிறேன் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் குடிச்சிட்டு வந்து நிக்கிறீங்களா என்று கோபமாக கேட்க்கிறார். அப்புடியே ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் அடிபடுறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.