சினிமா

நடிகை சமந்தா மும்பையில் வாங்கிய புதிய வீடு.. புகைப்படங்கள் இதோ

Published

on

நடிகை சமந்தா மும்பையில் வாங்கிய புதிய வீடு.. புகைப்படங்கள் இதோ

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக இவரிடம் இருந்து பெரிதாக வெற்றிப் படங்கள் எதுவும் இல்லை என்றாலும், டாப் நட்சத்திரமாகவும் நீடித்துக்கொண்டு இருக்கிறார்.மார்க்கெட்டை இழக்காமல் தனக்கென்று தனி இடத்தை இந்திய சினிமாவில் உருவாக்கியுள்ள சமந்தா, தற்போது படங்களை தாண்டி வெப் தொடர்களில் அதிகம் கவனம் செலுத்தி வருவதை நம்மால் பார்க்கமுடிகிறது. கடைசியாக சிட்டாடல் வெப் தொடரில் நடித்திருந்தார். அடுத்ததாக Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் மும்பையில் நடிகை சமந்தா புதிதாக வீடு ஒன்றை வாங்கினார். இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பாலிவுட்டில் அதிகம் கவனம் செலுத்தி வருவதன் காரணமாக அங்கே புதிய வீடு வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தனது புதிய வீட்டின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version