இந்தியா

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: ‘ஆக்கப்பூர்வ அழிவு’ ஆய்வுக்காக 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

Published

on

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: ‘ஆக்கப்பூர்வ அழிவு’ ஆய்வுக்காக 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

பொருளாதார நோபல் பரிசு அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த வேதியியலாளரும், தொழில் அதிபருமான ஆல்பிரட் நோபல் நினைவாக நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இது, உலகின் மிக உயர்வான விருதாக கருதப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி என 6 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுவது மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது.வழக்கம்போல, இந்தாண்டுக்கான விருதுகளுக்கு உரியவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி மற்றும் இலக்கியத்துவக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகிய 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை தெளிவுப்படுத்தியமைக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜோயல் மோகிர், பீட்டர் ஹோவிட் ஆகிய இருவர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். பிலிப் அகியோன் பிரிட்டன் நாட்டவர் ஆவர்.இந்தாண்டு நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார்?இதற்கிடையே இப்போது 2025-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் & பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோயல் மோகிர் & பீட்டர் ஹோவிட் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். பிலிப் அகியோன் பிரிட்டனைச் சேர்ந்தவர் ஆவார்.அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு நிகழ்கிறது என்பதை இந்த மூவரும் விளக்கியதற்காக இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நிலையான வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படைகளைக் கண்டறிந்ததற்காக ஜோயல் மோகிருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. “கிரியேட்டிவ் டிஸ்ட்ரக்ஷன்” எனப்படும் ஆக்கப்பூர்வ அழிவு மூலம் நிலையான வளர்ச்சி எப்படி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்ததற்காக பிலிப் அக்யான் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவத்திற்கான நோபல் பரிசுஅமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.இயற்பியலுக்கான நோபல் பரிசுஅமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.இலக்கியத்திற்கான நோபல் பரிசு71 வயதான ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் ‘லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை’-க்கு ( László Krasznahorkai)அறிவிக்கப்பட்டுள்ளது.அமைதிக்கான நோபல் பரிசுஅமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version