இலங்கை

மலையக மக்களுக்கு 2,000 வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!

Published

on

மலையக மக்களுக்கு 2,000 வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!

வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கை அறிக்கையை யதார்த்தமாக்குவதற்காக, ஹட்டன் பிரகடனத்திற்கு இணங்க, மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமையை உறுதி செய்யும் நோக்கத்தில், இந்து – லங்கா IV ஆம் கட்டத்தின் 10000 வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் 2,000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று முற்பகல் பண்டாரவளை பொது விளையாட்டரங்கில் கலந்து இடம்பெற்றது.

 இந்தத் திட்டத்திற்கும், இந்நாட்டு மக்களுக்கு சிறந்த பொருளாதார மற்றும் சமூக வாழ்வை வழங்குவதற்கும் தொடர்ந்து ஆதரவளிக்கும், இந்தியப் பிரதமர், இந்திய மக்கள் மற்றும் இந்தப் பணியை வழிநடத்தும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு நான் இதன்போது  ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

Advertisement

 சுமார் 202 ஆண்டுகளாக இந்த பூமியுடன் போராடி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களித்து வரும் மலையக சமூகம், இந்த நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக கடந்த பொதுத் தேர்தலில் தங்கள் உறவினர் மற்றும் அண்டை வீட்டாரை பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நம் மீது வைத்த எதிர்பார்ப்பு ஒருபோதும் தோல்வி அடைய இடமளிக்கப்பட மாட்டாது என்றும், அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, அவர்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்வை உறுதிசெய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version