இலங்கை
மாகாணசபைத் தேர்தலுக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துக; தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்து!
மாகாணசபைத் தேர்தலுக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துக; தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்து!
மாகாணசபைத்தேர்தல் நடத்தாமைக்கு தேர்தல் கள்ஆணைக்குழு காரணமல்ல. மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்தவேண்டும் என்ற சட்டம் தற்போது நாட்டில் இல்லை. அதனாலேயே அந்தத் தேர்தல் தாமதப்படுத்தப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்த வேண்டும் என்ற சட்டம் தற்போது நாட்டில் இல்லை. அவ்வாறிருக்கும் போது, தேர்தல்கள் ஆணைக்குழுவால் எவ்வாறு தேர்தலை நடத்தமுடியும்? தேர்தலை அவசரமாக நடத்த வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டும். ஆனால் இலங்கையின் தேர்தல்களின் புதிய முன்னேற்றங்கள் தொடர்பில் பேசிவிட்டு மீண்டும் பழைமையான முறைமைக்குச் செல்வது எதற்கு என்பதை சிந்திக்கவேண்டும். மாகாணசபைத் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை குறித்துப் பேசுகின்றனர்.அவ்வாறாயின் கலப்பு உறுப்பினர் விகிதாசார முறை அல்லது புதிய தேர்தல் முறைமை குறித்து ஏன் பேச வேண்டும்? எனவே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல- என்றார்.