தொழில்நுட்பம்

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-10 ஆதரவு நாளையுடன் நிறுத்தம்: நீங்க செய்ய வேண்டியது என்ன? உடனடி தீர்வுகள்!

Published

on

மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-10 ஆதரவு நாளையுடன் நிறுத்தம்: நீங்க செய்ய வேண்டியது என்ன? உடனடி தீர்வுகள்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 10-க்கான தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்கிறது. இதன் பிறகு, விண்டோஸ் 10 ஓ.எஸ். இயங்கும் கணினிகளுக்குப் பாதுகாப்புப் பிழைகளுக்கான இணைப்புகள் (Security Patches), பிழை திருத்தங்கள் (Bug Fixes) அதிகாரப்பூர்வ உதவி எதுவும் கிடைக்காது. இந்த ‘ஆதரவு முடிவு’ (End of Support) என்றால் என்ன? யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்? இனிமேல் பயனர்கள் செய்ய வேண்டும்? என்று கீழே பார்ப்போம்.”ஆதரவு முடிவு” (End of Support) என்றால் என்ன?உங்க விண்டோஸ் 10 கணினி தொடர்ந்து இயங்கும். ஆனால், அது புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு அதிகளவில் ஆளாகும். அக்.14, 2025-க்கு பிறகு, அனைத்து விண்டோஸ் 10 (Home, Pro, Enterprise, Education) மைக்ரோசாஃப்ட் பாதுகாப்பு அப்டேட், அம்ச அப்டேட் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதை நிறுத்தும். அப்டேட் இல்லாமல், பிழை திருத்தப்படாத ஓட்டைகள் (Vulnerabilities) மூலம் ஹேக்கர்கள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. மேலும், சாப்ட்வேர் இணக்கத்தன்மை குறையலாம், கணினியின் நிலைத்தன்மை பாதிக்கப்படலாம். தகுதிவாய்ந்த சாதனங்களுக்காக, மைக்ரோசாஃப்ட் நீட்டிக்கப்பட்ட பாதுகாப்பு அப்டேட் (Extended Security Updates – ESU) திட்டத்தை வழங்குகிறது. இதன் மூலம், காலக்கெடுவுக்குப் பிறகும் முக்கியப் பாதுகாப்புப் பிழைகள் தொடர்ந்து கிடைக்கும்.உங்க கணினி பாதிக்கப்பட்டுள்ளதா என்று எவ்வாறு சரிபார்ப்பது?விண்டோஸ் வெர்சன் சரிபார்க்கவும்: Settings → System → About என்பதற்குச் செல்லவும். அங்கு “Windows 10” என்று இருந்தால், உங்கள் கணினி பாதிக்கப்படும் பட்டியலில் உள்ளது. வெர்சன் (Version) விவரங்களைச் சரிபார்க்கவும். ஆதரவு அளிக்கப்பட்ட கடைசி வெர்சன் Windows 10, version 22H2 ஆகும். இதற்கு முந்தைய வெர்சன்களான ( 21H2, 20H2) நீங்க பயன்படுத்தினால், அவற்றுக்கு ஏற்கனவே ஆதரவு இழக்கப்பட்டிருக்கும் (அ) இழக்கப்படும். மேம்படுத்தல் (Upgrade) தகுதியை சரிபார்க்கவும். ESU (அ) விண்டோஸ் 11 அப்டேட் அளவுகோல்களை மைக்ரோசாஃப்ட் ஆதரவுப் பக்கங்களில் சரிபார்க்கலாம். சாப்ட்வேர் தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதை அறிய, Windows Update → Upgrade to Windows 11 பகுதிக்குச் சென்று பார்க்கலாம்.விண்டோஸ் 10 ஆதரவு நாளையுடன் முடிவடையும் நிலையில், நீங்க 3 வழிகளில் ஒன்றைத் தேர்வு செய்வது அவசியம்:விண்டோஸ் 11-க்கு அப்டேட் செய்தல் பெரும்பாலான நவீன கணினிகள் விண்டோஸ் 11-க்கான தேவைகளைப் (TPM 2.0, Secure Boot, ஆதரிக்கப்படும் CPU) பூர்த்தி செய்கின்றன. தகுதிவாய்ந்த சாப்ட்வேரில் விண்டோஸ் 11-க்கு மாறுவதற்கான செயல்முறை இலவசமாகும். அப்டேட் செய்வதற்கு முன், முக்கியமான பைல்ஸ் அனைத்தையும் காப்புப் பிரதி (Backup) எடுத்து வைத்துக்கொள்வதை உறுதிசெய்யவும்.நீட்டிக்கப்பட்ட பாதுகாப்பு புதுப்பித்தல்களைப் (ESU) பயன்படுத்துதல்உடனடியாக விண்டோஸ் 11-க்கு மேம்படுத்த முடியாத கணினிகளுக்கு, ESU திட்டம் ஒரு தீர்வாக உள்ளது. நுகர்வோருக்கான ESU திட்டத்தில், உங்களுக்கு அடுத்த ஆண்டு அக்.13, 2026 வரை பாதுகாப்புப் புதுப்பித்தல்கள் கிடைக்கும். ESU தொழில்நுட்ப ஆதரவை உள்ளடக்கியது அல்ல. மேலும், உங்கள் பகுதிக்கு ஏற்ப இதற்கு மைக்ரோசாஃப்ட் கணக்கு அல்லது கட்டணப் பதிவு தேவைப்படலாம்.வேறு OS அல்லது புதிய கணினிக்கு மாறுதல்உங்க கணினி விண்டோஸ் 11-க்கு இணக்கமாக இல்லை, ESU திட்டமும் உங்களுக்குச் சரியாக இல்லை என்றால், லினக்ஸ் விநியோகங்கள் (Linux distributions), குரோம்OS போன்ற பிற இயக்க முறைமைகளுக்கு மாறலாம் அல்லது விண்டோஸ் 11-க்கு இணக்கமான புதிய கணினியை வாங்கலாம். எந்த முடிவெடுப்பதற்கு முன்னரும், உங்க முக்கியமான பைல்-ஐ வெளிப்புற டிரைவ் அல்லது கிளவுட்டில் காப்புப் பிரதி எடுத்து வைக்கவும்.உங்க கணினி மேம்படுத்தப்படுவதற்குத் தகுதியுள்ளதா அல்லது ESU-வில் பதிவு செய்ய முடியுமா என்பதை உடனடியாகச் சரிபார்க்கவும். மேலும், உங்க டேட்டாவை உடனடியாகக் காப்புப் பிரதி எடுக்கவும். இன்றே நடவடிக்கை எடுப்பது, உங்கள் கணினி வரும் மாதங்களில் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் இருப்பதை உறுதிசெய்யும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version