சினிமா
வாட்டர் மெலன் ஸ்டாருக்கு PR டீம் இருக்கா? அசுர வேகத்தில் நடந்த மாற்றம்
வாட்டர் மெலன் ஸ்டாருக்கு PR டீம் இருக்கா? அசுர வேகத்தில் நடந்த மாற்றம்
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த ரியாலிட்டி ஷோ தான் அடுத்த மூன்று மாதத்திற்கும் டிஆர்பியை அடிக்கும். பல கோடி பொருட்செலவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி பல மொழிகளிலும் வெளியாகி வருகின்றது. இந்த சீசனில் ஒரு சிலர் மட்டும் தான் சீரியல் பிரபலங்களாகவும், திரைப்பட பிரபலங்களாகவும் உள்ளனர். ஏனையவர்கள் அதிக அளவில் சோசியல் மீடியா பிரபலங்களாக காணப்படுகின்றனர். இது விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தது.அந்தவகையில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், விஜே பார்வதி, அரோரா , துஷார் உள்ளிட்ட சோஷியல் மீடியா பிரபலங்கள் என மொத்தம் 20 பேர் உள்ளே போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். பிக்பாஸ் செல்லும் முன்பே வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் பற்றி சோசியல் மீடியாக்களில் பல விமர்சனங்களும், நெகட்டிவ் கருத்துக்களும் எழுந்தன. அவர் டாக்டர் என்றாலும் நடிகன் என்று நடித்துக் காட்டுவதால் பல ட்ரோல்களுக்கு உள்ளானார். இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் தற்போது திவாகருக்கு ஆதரவு பெருகி வருவதால் அவருக்கு பி ஆர் டீம் இருக்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பத்தில் நெகட்டிவ் கமெண்ட்ஸ் உடன் உள்ளே சென்ற திவாகர், ஒரு வாரத்திற்கு உள்ளையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றார். அவர் எழுந்து நிற்கும் போது கூட ஆடியன்ஸ் தாராளமான கைத்தட்டல்களை கொடுத்தனர். விஜய் சேதுபதி கூட நீங்க தனியா விளையாடினால் ரொம்ப தூரம் போவீங்க என்று பாராட்டி இருந்தார். இப்போது திவாகர் பாசிட்டிவ் மைண்டோடு இருக்கிறார். இதனாலையே அவருக்கு பிஆர் டீம் இருக்கா என்ற கேள்வி எழுந்தது. ஆரம்பத்தில் இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர் என்று கூறியவர்கள் எல்லாம், தற்போது திவாகரை தவிர மற்றவர்கள் எல்லோரும் மனிதர்களே கிடையாது என்று கூறுவதும் குறிப்பிடத்தக்கது.