உலகம்
ஹமாஸ் வசம் இருந்த 13 இஸ்ரேலிய பணயக்கைதிகள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு!
ஹமாஸ் வசம் இருந்த 13 இஸ்ரேலிய பணயக்கைதிகள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு!
ஹமாஸால் கடத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளாக நிலத்தடி சுரங்கப்பாதைகளில் வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள 13 இஸ்ரேலிய பணயக்கைதிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இஸ்ரேலிய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, இன்று (13) உயிர் பிழைத்த 20 பணயக்கைதிகளும் இஸ்ரேலிய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்படவுள்ள 1,966 பாலஸ்தீன கைதிகளும் இஸ்ரேலிய சிறைகளில் பேருந்துகளில் ஏறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குழுவைத் தவிர, ஹமாஸால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பேர் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லங்கா4 (Lanka4)
அனுசரணை