பொழுதுபோக்கு

10-ம் வகுப்பில் ஃபர்ஸ்ட் லவ்; இலையில் வந்த காதல் கடிதம்; சீரியல் நடிகை ஷபானா ஓகே சொன்னாரா?

Published

on

10-ம் வகுப்பில் ஃபர்ஸ்ட் லவ்; இலையில் வந்த காதல் கடிதம்; சீரியல் நடிகை ஷபானா ஓகே சொன்னாரா?

சின்னத்திரையில் மிகவும் பிரபல நடிகையாக இருப்பவர் ஷபானா. இவர்  மும்பையில் பிறந்தவர். இவர் முதன்முதலில் 2016-ஆம் ஆண்டு மலையாளத் தொலைக்காட்சியில் ‘விஜயதசமி’ என்ற தொடர் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இருப்பினும், தமிழ் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமான பின்பு தான்  அவர் பெரும் புகழைப் பெற்றார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ என்ற தொடரில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஷபானா தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்தத் தொடர் மிக நீண்ட காலம் வெற்றிகரமாக ஓடியது. ‘செம்பருத்தி’ தொடருக்குப் பிறகு, சன் டிவியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் மனைவி’ தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தொடரில் இருந்து விலகினார். சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 6-ல் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் ஷபானா மேலும் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல், இளசுகள் அனைவரும் ஷபானா.. ஷபானா என்று அன்பு மழையை பொழிந்து தள்ளினர்.நடிகை ஷபானா, நடிகர் ஆர்யனை நவம்பர் 11, 2021 அன்று காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். ஷபானாவும் ஆர்யனும் காதலித்து தங்கள் குடும்பங்களின் சில எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு ஷபானா தனது பெயரை ஷபானா ஷாஜஹான் ஆர்யன் என மாற்றிக்கொண்டார். தற்போது இவர் ஹாட் ஸ்டார் ஓ.டி.டி-யில் ஒளிபரப்பாகி வரும் ’போலீஸ் போலீஸ்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.இந்நிலையில், நடிகை ஷபானா தனக்கு வந்த முதல் லவ் லெட்டர் குறித்து மனம் திறந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் அவர் கூறியதாவது, “எனக்கு முதல் புரொபோசல் 10-ஆம் வகுப்பு படிக்கும் போது வந்தது. என் கூட படித்த பையன் தான் புரொபோஸ் பண்ணினான். ஒரு இலையில் ஐ லவ் யூ என்று எழுதி என் கையில் கொடுத்தான். நான் அதை பார்த்துவிட்டு அப்படியே வைத்துவிட்டேன். எனக்கு அந்த வயதில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. என் தோழிகளிடம் எல்லாம் அந்த பையன் ஐ லவ் யூ என்று எழுதி கொடுத்தான் என்று சொன்னதில் வகுப்பு முழுவதும் அந்த விஷயம் தெரிந்துவிட்டது.” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version