பொழுதுபோக்கு
4 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர்; கமலுக்கு மனைவி, அஜித்துக்கு காதலி: இந்த நடிகை – பாடகி யார் தெரியுமா?
4 சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர்; கமலுக்கு மனைவி, அஜித்துக்கு காதலி: இந்த நடிகை – பாடகி யார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் 4 சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை ஒருவர், இந்தியில் ஷாருக்கான், அமீர்கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுக்கு பாடல் பாடியுள்ளார். இப்படி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள நடிகை நடித்தது 12 படங்கள் தான். ஆனாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்னும் குறையவில்லை என்று சொல்லலாம். அந்த நடிகை யார் தெரியுமா?தமிழில், கடந்த 2000-ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகை வசுந்தரா தாஸ் தான். படத்தில் கமல்ஹாசனின் 2-வது மனைவியாக நடித்திருந்த இவர், 2001-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் குறும்புத்தனங்கள், பலரையும் கவர்ந்த நிலையில், அஜித்தை துரத்தி துரத்தி காதலிக்கும் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார்.குறிப்பாக இந்த படத்தில் அவர், நான் வாழ்வதற்காக சாகுர அளவுக்கு ரிஸ்க் எடுக்க தயார் என்று சொல்வார். இந்த வசனம் படம் வெளியான சில வருடங்களுக்கு பிறகு, பலரும் பயன்படுத்தும் வசனமாக மாறியது. அதே ஆண்டு, மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ராவணபிரபு என்ற படத்தில் நடித்திருந்தார், இந்த படமும் பெரிய வெற்றியை கொடுத்தது. கன்னடத்தில் தர்ஷனுடன் லங்கேஸ் பத்ரிகே, இந்தியில் ஃபிலிம் ஸ்டார், மம்முட்டியுடன் வஜ்ரம், உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக கடந்த 2024-ம் ஆண்டு கன்னத்தில் வெளியாக கௌரி என்ற படத்தில் நடித்திருந்த வசுந்தரா தாஸ், 1999-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில் வரும் சக்கலக்க பேபி என்ற பாடல் முதலம் பாடகியாகவும் அறிமுகமானார். குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா, சிட்டிசன், சில்லுனு ஒரு காதல், மன்மதன், உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இந்தியில் அமீர்கானின் லகான், ஷாருக்கானின் கால்கோ நா கோ, மொயின் ஹோனா, தூம், உள்ளிட்ட பல ஹிட் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.மலையாளத்தில் மோகன்லாலுடன் வசுந்தரா தாஸ் இணைந்து நடித்த ராவணப்பிரபு மீண்டும் திரையரங்குகளுக்கு வந்துள்ளது. இது ரசிகர்களுக்கு, பழைய நினைவுகளின் பயணத்தை அளித்துள்ளது. பாத்திரங்கள் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதே சமயம், இப்படத்தின் ஜானகி கேரக்டரில் வந்த வாசுந்தரா தாஸ் இப்போது எங்கே என்ற கேள்வியும் இருக்கிறது.மேடினி நௌ (Matinee Now) என்ற ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், அவர் தனது தற்போதைய வாழ்க்கை மற்றும் அவர் ஈடுபட்டுள்ள படைப்பு முயற்சிகளைப் பற்றி மனம் திறந்து பேசினார். நிகழ்ச்சிகள் எனக்கு ஒரு முக்கிய அம்சமாகவே இருக்கின்றன. இசைக்கலைஞர்களுடனும் எனது இசைக்குழுவுடனும் தொடர்ந்து உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறேன். இப்போது பல்வேறு இசை வகைகளை ஆராய்வதற்கான நேரம் எனக்குக் கிடைத்துள்ளது,” என்று அவர் கூறினார்.தனது அமைப்பான டிரம்ஜாம் (Drumjam) பற்றிய செயல்பாடுகளைப் பற்றிப் பேசும்போது, அவரும் அவரது கணவரும் (டிரம்ஸ் வாசிக்கும் ராபர்டோ நரேன்) அதை 2005-06 ஆம் ஆண்டில் நிறுவியதாக வாசுந்தரா வெளிப்படுத்தினார். இது நிறுவனப் பயிற்சியின் ஊடகமாக இசையைப் பயன்படுத்துகிறது. குழுப்பணி, தலைமைப் பண்பு மற்றும் பயிற்சி ஆகியவற்றின் சூழலில் மக்களுக்கு அனுபவங்களை வழங்க நாங்கள் லயம் மற்றும் குரலைப் பயன்படுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.மேலும், நாங்கள் பொழுதுபோக்குக்கு அப்பாற்பட்ட ஊடகமாக இசையைப் பயன்படுத்துகிறோம். இசை என்பது நினைவாற்றல் மற்றும் தியானத்திற்கான ஒரு குறுக்குவழியாக இருக்க முடியும். இது சிகிச்சை அல்ல, ஆனால் சிகிச்சை அளிக்கும் தன்மையைக் கொண்டது. நான் ஒரு பாடகி, பாடலாசிரியை மற்றும் இசையமைப்பாளர். மேலும், நான் இசை மூலம் தகவல்தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் தலைமைப் பண்பு ஆகியவற்றுக்கு ஒரு ஊடகமாகப் பயன்படுத்துகிறேன்.பூர்வீக அமெரிக்கப் புல்லாங்குழல் போன்ற சில இசைக்கருவிகளை நான் வாசிக்கிறேன். இந்த தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் டிஜிட்டல் உலகில், மன அழுத்தம், பதட்டம், நோய்கள் மற்றும் அவர்கள் காணக்கூடிய பல சூழ்நிலைகளை மக்கள் சமாளிக்க உதவுவதற்கும், மக்களுடன் தொடர்பு கொள்ள லயத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கும் நாங்கள் முயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளார்.