உலகம்
அமெரிக்காவில் வீதியில் விழுந்த விமானம் ; இருவர் பலி!
அமெரிக்காவில் வீதியில் விழுந்த விமானம் ; இருவர் பலி!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் வொர்த்அலையன்ஸ் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. டாரன் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. அமெரிக்காவின், நெடுஞ்சாலை வீதியில் சென்ற லொறி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 2 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தன. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்து தொடர்பில் விமான போக்குவரத்து திணைக்களம் மேலதிக விசாரணை நடத்தி வருகிறது.