சினிமா

அறுத்துடுவேன்..! ரோகிணியை கதிகலங்க வைக்க விஜயா எடுத்த முடிவு?

Published

on

அறுத்துடுவேன்..! ரோகிணியை கதிகலங்க வைக்க விஜயா எடுத்த முடிவு?

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில்,  மீனாவுக்கு ஆன்லைன் மூலம்   பூ டெக்ரேசன் ஆர்டர் செய்வதற்கு  ஸ்ருதி ஐடியா கொடுக்கின்றார்.  இதன் போது அங்கு வந்த விஜயா, ஸ்ருதியை மடக்குவதற்காக  ரவியை பற்றி பேசுகின்றார்.  ஆனாலும் விஜயாவின் பேச்சை ஸ்ருதி காதில் வாங்கவில்லை. அதன் பின்பு ரவி வரவும்,  ஸ்ருதியுடன் சேர்ந்து ரெஸ்டாரண்டை நடத்துமாறு சொல்லுகின்றார். மேலும்  ஸ்ருதி ஒரே பொண்ணு.. அவருடைய சொத்துக்கள் எல்லாம் உனக்கு தானே வரும்.. நான் எஞ்சின் டிரைவரை கட்டிட்டு கஷ்டப்படுகின்றேன் என்று பேச, இதனை பின்னால் இருந்து அண்ணாமலை கேட்கிறார். இதன்போது அங்கு வந்த அண்ணாமலை,  இதனை என்னை கல்யாணம் பண்றதுக்கு முதலில் சொல்லியிருக்கணும்.. அப்போவும் நான் என்ஜின் டிரைவர் தான்.. என்னால் முடிந்த வரை என் பிள்ளைகளை படிக்க வைத்து விட்டேன்..  உனக்கு என்ன குறை?  மூன்று வேலை சாப்பிடுறா.. நன்றாக உடுத்துகின்றாய் என்று பேசுகின்றார். இதைத்தொடர்ந்து  மீனாவின் பூ ஆர்டர்  வியாபாரம்  பற்றி பேச, விஜயா முதல் முறையாக மீனாவுக்கு சப்போர்ட் பண்ணுகின்றார். அதன் பின்பு ரோகினியை தாழ்வாக பேசுகின்றார்.  இறுதியில்  ரோகிணி ஏதாவது பண்ணி சம்பாதிக்க சொல்லு, இல்லையென்றால் இந்த வீட்டில் இருந்தும் உன்னிடம் இருந்தும் அறுத்து விடுவேன் என்று  மனோஜ் ரோகிணிக்கு வார்னிங் கொடுக்கிறார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version