சினிமா
இப்படி சொல்ற என்னை அப்படின்னு நீங்க நினைச்சா…ஆமா!!இயக்குநர் மிஸ்கின் பேச்சு..
இப்படி சொல்ற என்னை அப்படின்னு நீங்க நினைச்சா…ஆமா!!இயக்குநர் மிஸ்கின் பேச்சு..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் திகழ்ந்து வரும் இயக்குநர் மிஷ்கின், பட விழாக்களில் சர்ச்சையாக பேசி பேசு பொருளாகிவிடுவார்.சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகப்போகும் டீசல் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது ஹரிஷ் கல்யாண் நீ நடிச்ச படத்தை பார்த்தது இல்லை, இப்போ ஒரு பாப்பாவுடன் நடித்து வருகிறேன், அவள் பெயர் கூட, ஹா…கீர்த்தி சுரேஷ்.அவளுடைய படங்களை நான் பார்த்தது இல்லைன்னு சொன்னேன். பயங்கரமா கோபம் வந்துடுச்சு கீர்த்திக்கு. இப்படி சொல்லும் என்னை நீங்கள் பருப்பு என்று நினைத்தால் ஆம் நான் பெரிய பருப்பு தான்.நான் அப்படி இருக்கணும்னு நினைக்கிறேன். சினிமாவில் 24 கிராஃப் இருக்கு, நான் சாகும் வரை வேலை செய்துட்டு இருக்கணும், சினிமா என் தாய், என் கடவுள் என்று மிஷ்கின் பேசியுள்ளார்.