சினிமா

இரவு முழுவதும் அந்த காட்சிக்காக.. மனம் திறந்த ரசிகர்கள் கனவுக்கன்னி மமிதா!

Published

on

இரவு முழுவதும் அந்த காட்சிக்காக.. மனம் திறந்த ரசிகர்கள் கனவுக்கன்னி மமிதா!

மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பின் தொடர்ந்து படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ.இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட இவர், ப்ரேமலு என்ற ஹிட் படத்தை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக் கொண்டார்.தற்போது பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் (Dude) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறார்கள். சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார்.இந்நிலையில், இப்படத்தின் விழாவில் மமிதா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், ” படத்தில் சில உணர்ச்சி வாய்ந்த காட்சிகள் இருந்தன. அந்த காட்சிகளுக்கான வசனங்களை இரவு முழுவதும் பயிற்சி செய்தேன். அது சவாலாகவும் உற்சாகமாகவும் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version