இந்தியா

இலங்கை கடற்படையால் 17 காரைக்கால் மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறைக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

Published

on

இலங்கை கடற்படையால் 17 காரைக்கால் மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறைக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சிவராமன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் சல்மேட்டை ராஜேஷ், ஸ்ரீராம், திருப்பட்டினம் தமிழரசன், நாகமுத்து, முருகரசன் ஞானவேல் மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த மீனவர்கள் உள்பட 17 பேர் கடந்த 9-ந் தேதி கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் விசைப்படகில் தங்கியிருந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் முல்லைத்தீவு கடல்பரப்பில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 17 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்று, சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்கக்கோரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.  இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ரங்கசாமி  கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களையும், அவர்களது படகையும் மீட்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version