இலங்கை

உடலின் வெப்பநிலையைச் சீராக்க இயற்கைத் தீர்வுகள்

Published

on

உடலின் வெப்பநிலையைச் சீராக்க இயற்கைத் தீர்வுகள்

பருவநிலை மாற்றம் காரணமாகவோ, உடலில் ஏற்படும் பிரச்சனைகள், அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் மூலமாகவோ பலருக்கு உடல் சூடு ஏற்படுவதுண்டு.

ஆனால் உடல் சூட்டைக் கட்டுப்படுத்த முடியாமல் சிலர் சிரமப்படுவதுண்டு. உடல் சூட்டை எப்படித் தவிர்க்கலாம் என்று பார்க்கலாம்.

Advertisement

* மருந்து உட்கொள்வதால் ஏற்படும் உடல் சூட்டைச் சரியான உணவு முறையின் மூலமாகத்தான் சரி செய்ய முடியும்.

* பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் உடல் சூட்டை சில பழக்க வழக்கங்களால் மாற்ற முடியும்.

* இரவில் தூங்கும்போது விளக்கெண்ணெய்யை உள்ளங்கால்களில் தடவி மசாஜ் செய்யலாம்.

Advertisement

* இரு பெரு விரல் நகங்களிலும், உச்சந்தலையிலும் தடவி விடலாம்.

* தொப்புளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவியும் மசாஜ் செய்யலாம்.

* விளக்கெண்ணெய் மசாஜ் உடலின் மையப்பகுதியில் நிலவும் வெப்பத்தைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.

Advertisement

* விளக்கெண்ணெய் இயற்கையான மலமிளக்கியாகச் செயல்படக்கூடியது.

* உடலில் உள்ள கழிவுகள், நச்சுக்களை நீக்கி உடல் சூட்டைக் குறைக்க உதவுகிறது.

* எண்ணெய் மசாஜ் எவ்வளவு சிறந்ததோ அதே அளவு முக்கியமானது போதுமான அளவு தண்ணீர் குடிப்பது.

Advertisement

* இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளரில் சிறிதளவு சோம்பை ஊறவைத்து விட்டு காலையில் எழுந்தவுடன் அந்த நீரைப் பருக உடல் சூடு குறையும்.

உங்கள் உடலின் தன்மையை முதலில் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் உடல் சூடான தன்மை கொண்டதா அல்லது குளிர்ச்சியான தன்மை கொண்டதா என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

ஒருவேளை உங்கள் உடல் சூடான தன்மை கொண்டது என்றால் நீங்கள் தினமும் காலையில் எழுந்ததும் சிறிதளவு வெந்தயம் சாப்பிடலாம். அல்லது வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரைக் காலையில் வெறும் வயிற்றில் பருகலாம்.

Advertisement

இதைத் தொடர்ந்து செய்துவர உடல் சூடு ஏற்படுவது முற்றிலும் நின்றுவிடும்.

ஆனால் குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள் தொடர்ந்து வெந்தயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அதற்கு மாறாகப் பால் மற்றும் தேன், புதினா டீ முதலானவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

Advertisement

முக்கியமாக காரமான, பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும்.

இவற்றைத் தவிர்த்தால் மட்டும் தான் உடல் சூட்டைத் தவிர்க்கத் துணை புரியும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version