பொழுதுபோக்கு

ஒரு படம் பண்ணணும், உங்க கால்ஷீட் கிடைக்குமா? பிரபல இயக்குனரிடம் கேட்ட ரஜினிகாந்த்; கேப்டன் படத்தால் வந்த வாய்ப்பு!

Published

on

ஒரு படம் பண்ணணும், உங்க கால்ஷீட் கிடைக்குமா? பிரபல இயக்குனரிடம் கேட்ட ரஜினிகாந்த்; கேப்டன் படத்தால் வந்த வாய்ப்பு!

1990-களில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் ஆர்.வி. உதயகுமார். இவர் ‘உரிமை கீதம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, ’புதிய வானம்’, ’உறுதிமொழி’, ‘கிழக்கு வாசல்’, ‘சின்னக் கவுண்டர்’, ‘எஜமான்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். முன்னணி நடிகர்கள் பலரின் படங்களை ஆர்.வி. உதயகுமார் இயக்கியுள்ளார்.இந்நிலையில், ரஜினி நடித்த ‘எஜமான்’ திரைப்படம் எப்படி உருவானது என்பது குறித்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, “ரஜின் சார் கால் பண்ணி ’சின்னக்கவுண்டர்’ படல் நல்ல ஓடுவதாக சொன்னார். நான் ஆமாம், சார் ‘மன்னன்’ படத்திற்கு பிறகு ‘சின்னக்கவுண்டர்’ படம் நல்ல வசூல் செய்திருக்கிறது என்றேன். அவர் இல்லை ‘சின்னக்கவுண்டர்’ தான் அதிகம் வசூல் செய்திருப்பதாக சொன்னார். அதன்பிறகு என்னை சந்திக்க வேண்டும் என்று கூறினார். நான் அவரது அலுவலகத்திற்கு சென்றேன்.அபோது நாம் இருவரும் படம் செய்வோம் என்று ரஜினி சார் சொன்னார். யாரை தயாரிப்பாளராக போடலாம் என்று கேட்டார் ரஜினி. எதாவது பண்ணுங்க என்றேன். அப்பறம் ஒரு ஏழு, எட்டு தயாரிப்பாளர் பெயர் சொன்னார். நான் கதையை முதலில் கேளுங்கள் அதன்பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று கதை சொன்னேன். இறுதியில் கிளைமேக்ஸில் ஒரு 30 ஹெலிஹாப்டர் வேண்டும் என்றேன். அந்த படத்தின் ஓபனிங் இன்று வரையும் எந்த சினிமாவிலும் வரவில்லை.ஓபனிங் சொன்னதும் ரஜினி எழுந்து கட்டிப்பிடித்துவிட்டார். நான் முதலில் ரஜினியை சந்திக்கும்போது கேட்டேன் ரஜினி படத்தை நான் இயக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை என் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்றேன். அவர் இரண்டும் ஒன்று தானே என்றார். நான் இல்லை ரஜினி படத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு காமெடி ஒரு பைட் சீன் என்று வைத்து நீங்கள் வந்தாலே படம் ஓடிவிடும்.அதை நான் பண்ணவா இல்லை என் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்றேன். ரஜினி படம் செய்யலாம் என்றார். இதையடுத்து, படத்திற்கு பூஜை போட்டு முழு சம்பளமும் வாங்கிவிட்டேன். அதன்பிறகு செலவு அதிகரிக்கும் என்று சொல்லி கதையை மாற்ற சொன்னார்கள். அதன்பின்பு தான் ‘எஜமான்’ படத்தை இயக்கினேன். இந்த படத்தில் கடைசி வரையிலும் ரஜினி எதிலும் தலையிடவில்லை நான் சொன்னது போன்று தான் நடித்தார்” என்றார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version