இலங்கை

டைனியா பெடிஸ் வேகமாக பரவும் அபாயம் – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எச்சரிக்கை!

Published

on

டைனியா பெடிஸ் வேகமாக பரவும் அபாயம் – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எச்சரிக்கை!

 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தோல் சிவத்தல், வியர்வை கொப்புளங்களை ஒத்த சிறிய கொப்புளங்கள் மற்றும் அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரை  நாடா வேண்டும் என்று கொழும்பு தேசிய மருத்துவமனை  தோல்மருத்துவர்  இந்திராகஹாவிட்ட இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

இது டைனியா பெடிஸ் ஆக இருக்கலாம் என்றும், இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும்,   அதிகமாக கர்ப்பிணித்தாய்மார்களும்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர் என்றும் மருத்துவர் மேலும்  கூறுயுள்ளார்.
 எனவே, அக்குள் மற்றும் இடுப்பு உட்பட உடலில்  கடுமையாக அரிப்பு ஏற்பட்டால், அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் ,எனவும் அது நோயை மோசமாக்கும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

Advertisement

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பெரும்பாலும் வாய்வழி மருந்துகள் வழங்கப்படுவதில்லை, ஆனால் தோல் மருத்துவர்  இப்போது டைனியா பெடிஸ் நோய் மோசமடைந்த நோயாளிகளுக்கு வாய்வழி மருந்துகளை பரிந்துரைக்க வேண்டியிருக்கிறது என்று  குறிப்பிட்டுள்ளார்.

பிரசவத்திற்குப் பிறகு கருவைப் பாதிக்கும் என்பதால், கர்ப்ப காலத்தில் சரியான சிகிச்சையைப் பெறுவதன் மூலம் இந்த நோயை முழுமையாக தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் களிம்புகளைப் பயன்படுத்துவதால் இந்த மோசமான நிலைமைகள் உள்ள நோயாளிகள் சந்திக்கப்படுவதாகவும், தேசிய மருத்துவமனையின் தோல் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளில் சுமார் 20 சதவீதம் பேர் டைனியா பெடிஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version