இலங்கை
திஸ்ஸ விகாரையில் கயல் மஹா உற்சவம்; காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போராட்டம்
திஸ்ஸ விகாரையில் கயல் மஹா உற்சவம்; காணி உரிமையாளர்கள் எதிர்த்துப் போராட்டம்
தையிட்டி திஸ்ஸ விகாரையில் பலாலிப் பொலிஸாரும், காங்கேசன்துறைப் பொலிஸாரும் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை காலை பெருமெடுப்பில் கயல் மஹா உற்சவத்தை நடத்தினார்கள். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றுக் காலை 6.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. விகாரையில் இடம்பெற்ற உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட பிக்குமார்கள், சிங்கள் மக்கள். பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக மாற்றுப் பாதை ஊடாக விகாரையை நோக்கிச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு விட்டுப் பின்னர் அதேபாதையால் திரும்பிச் சென்றனர்.
போராட்டம் காரணமாகத் தையிட்டி திஸ்ஸவிகாரைச் சூழலிலும், அதனை அண்டிய பகுதிகளிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.