பொழுதுபோக்கு

தீனா படத்தில் அஜித் ஓட்டிய பைக்… ‘எனக்கு பெரிய கவுரவம்’: காந்தாரா சாப்டர் 1 நடிகர் பேட்டி

Published

on

தீனா படத்தில் அஜித் ஓட்டிய பைக்… ‘எனக்கு பெரிய கவுரவம்’: காந்தாரா சாப்டர் 1 நடிகர் பேட்டி

இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காந்தாரா. இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்கை கலக்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்து கன்னட திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளது. மேலும், கன்னடத்தில் அதிக வசூல் செய்த இரண்டாவது படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.’காந்தாரா’ படத்தில் பஞ்சுரு சத்ததை கேட்டு நாம் அனைவரும் நடுங்கினோம். ஆனால், ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தில் பிளாக் மேஜிக் செய்யும் நபராக வனத்தில் ஒரு குழுவின் தலைவராக இருந்த சம்பத் ராமை பார்த்து தான் அனைவரும் பயந்தனர். முகம் முழுவதும் கருப்பு மையை பூசிக் கொண்டு யார் இது என்ற அடையாளமே தெரியாமல் ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தில் நடித்தவர் தான் சம்பத் ராம்.தொலைக்காட்சி தொடர்கள் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர் ‘முதல்வன்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தனது பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து, தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் ஒன்று ஹீரோ கதாபாத்திரத்திற்கு வலது கையாக இருப்பார். இல்லையென்றால் வில்லன் கதாபாத்திரத்திற்கு வலது கையாக இருப்பார். முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் படங்களில் சம்பத் ராம் நடித்துள்ளார்.தற்போது இவர் ஜி.வி.பிரகாஷ், சமுத்திரக்கனி நடிக்கும் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தில் நடிகர் சம்பத் ராமிற்கு முகம் மட்டுமல்லாமல் பற்களிலும் கூட கருப்பு மை பூசப்பட்டதாம். இவருக்கு மேக்கப் போட பல மணிநேரம் ஆகும். அதிலும், அந்த மேக்கப்பை கலைக்க அதிலும் அதிகமான நேரம் ஆகுமாம். ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் சம்பந்த் ராம், பான் இந்தியா அளவில் பிரபலமாகியுள்ளார்.இந்நிலையில், தீனா படத்தில் அஜித் ஓட்டிய பைக் நடிகர் சம்பத் ராமின் பைக்காம். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்த அவர், “அஜித் சார் பற்றி  சொல்வதற்கு ஒரு விஷயம் இருக்கிறது. ‘உன்னை கொடு என்னை தருவேன்’ படம் தொடங்கி அஜித் சாருடன் இணைந்து பணிரெண்டு படங்கள் நடித்துவிட்டேன். ‘தீனா’ படத்தில் அஜித் சார் பைக் ஓட்டும் காட்சிகளில் என் சொந்த பைக்கை பயன்படுத்தினார். அதை நான் பெருமையாக நினைக்கிறேன்” என்றார். நடிகர் சம்பத் ராம் ஏழ்மையின் காரணமாக அஜித் ஓட்டிய தனது பைக்கை விற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version