இலங்கை
நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு!
நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு!
கண்டி மாநகர சபை எல்லைக்குள் உள்ள பல பகுதிகளில் இன்று (14) காலை 10.00 மணி முதல் நாளை (15) காலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என்று கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாபனாவதுர, வட்டரந்தென்ன, குடா ரத்வத்த மாவத்தை, கட்டுகஸ்தொட, யடிவாவல, கலேவத்த, கஹல்ல, சியம்பலகஸ்தென்ன, அருப்போல, வட்டபுலுவ, மாவில்மட, லெவெல்ல, மஹையாவ, நிட்டவெல, பிடகந்த, பூர்ணவத்த மற்றும் கட்டுகஸ்தொட சாலை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை