இலங்கை

நிதி மோசடியாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை

Published

on

நிதி மோசடியாளர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை

பிரதி அமைச்சர் சுனில் வட்டகல திட்டவட்டம்

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும். குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

Advertisement

ராஜபக்சக்கள் உட்பட கடந்தகால ஊழல்வாதிகளின் ஊழல் மோசடிகள் வெளிவரும்போது, பல ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர். அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். றக்பி வீரர் தாஜூதீனின் படுகொலை தொடர்பில் புதியவிடயங்கள் வெளியாகும்போது, நாமல் ராஜபக்ச அச்சமடைந்து பொலிஸ் திணைக்களத்தின்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தினார்கள். சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை அரசியல்மயப்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்குக் கிடையாது. ஆணைக்குழுவால்” வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாகவே ஒரு சில அதிகாரங்கள் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்படவுள்ளன. பொலிஸ் ஆணைக்குழுவின் சுயாதீனத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது -என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version